திமிரி வட்டார அளவில் 10க்கும் மேற்பட்ட இல்லம் தேடி கல்வி மையங்களில் பார்வையிட்டு மாணவ மாணவிகளுக்கு புத்தகம் வழங்கி பாராட்டு.
தமிழக முதல்வர் மாணவர்களின் நலன் கருதி கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளிகளை குறைக்கும் வகையில் இல்லம் தேடி கல்வி மையம் செயல்படுத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, திமிரி அடுத்த பரதராமி ஊராட்சிக்கு உட்பட்ட 10க்கும் மேற்பட்ட இல்லம் தேடி கல்வி மையங்களை,
திமிரி வட்டார வளமைய மேற்பார்வையாளர் குமரேசன், வட்டார கல்வி அலுவலர் பொறுப்பு விஜயா, ஆகியோர் மையங்களுக்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்போது மாணவர்கள் இடத்தில் பாடப் புத்தகத்திலிருந்து ஒரு சில கேள்விகளை கேட்டு அறிந்தார்.
அப்போது சிறப்பான முறையில் பதில் அளித்த மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகங்கள் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனார். அதேபோல் திமிரி ஒன்றியத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும்,
இல்லம் தேடி கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் பாபு, வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வன் ஆகியோர் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் நேரில் சென்று இல்லம் தேடிக் கல்வி மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.