BREAKING NEWS

திமுகவின் வரலாறு என்ன, எவ்வாறு நெருப்பாற்றில் நீந்தி வந்தது என்ற வரலாறு , புதிதாக அரசியலுக்குவந்த அண்ணாமலைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை… திமுக வை விமர்சிக்கும் தகுதி அண்ணாமலைக்கு உள்ளதா என்பதை சிந்திக்க வேண்டும்… அண்ணாமலையின் ஒவ்வொரு பேச்சும் 100 வாக்குகளை திமுகவுக்கு பெற்று தரும்… தஞ்சையில் திராவிடர் கழக தலைவர் கி .வீரமணி பேட்டி….

தந்தை பெரியாரால் 88 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட விடுதலை நாளிதழின் ஆசிரியராக, 60 ஆண்டுகள் திராவிடர் கழக தலைவர் வீரமணி பணியாற்றிவருவதையொட்டி , 60 ஆயிரம் விடுதலை சந்தாதாரர்களை திரட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக தஞ்சையில், பழைய பேருந்து நிலையம் அருகே வீதிகளில் நடந்து சென்று விடுதலை சந்தாதிரட்டும் பணியில் ஈடுபட்ட திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு வணிகர்கள் உற்சாக வரவேற்ப்பளித்தனர்.. இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி. கே. ஜி. நீலமேகம், தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், திராவிடர் கழக பொதுச் செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகி பங்கேற்றனர்..

இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி….

ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்ற பெயரில் ஜனநாயகத்தை விரட்டி அடிக்க முயற்சிக்கும் ஆர். எஸ். எஸ், பி ஜே பி நோக்கம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக,. லாபம் நோக்கம் கருதாமல், கருத்தியியல் நோக்கத்திற்காக , கருத்தாயுதமான விடுதலையை வாசிக்க வேண்டும் என்பதற்காக, மக்கள் இயக்கமாக தஞ்சையில் நடத்துகிறோம் என்றவர், திமுகவின் வரலாறு என்ன, எவ்வாறு நெருப்பாற்றில் நீந்தி வந்தது என்ற வரலாறு , புதிதாக அரசியலுக்கு வந்த அண்ணாமலைக்கு தெரிய வாய்ப்பில்லை என்றவர், அவர் முன்னுக்கு பின் முரணாக பேசுபவர் என்பதற்க்கு, உதாரணம் தேசிய கொடியுடன் சென்ற அமைச்சரின் கார் மீது செருப்பு வீச்சுக்கு கண்டனம் வழுத்த பிறகு, தவறுதான் என ஒப்புக்கொண்டதாகும்..

அண்ணாமலையின் ஒவ்வொரு பேச்சும் திமுகவிற்கு நூறு வாக்குகளை பெற்று தரும் , எனவே அந்த பணி தொடரட்டும் என்றார்..

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )