திமுகவில் அதிக உறுப்பினர்கள் சேர்க்கும் திமுக கிளை நிர்வாகிகளுக்கு 8 கிராம் தங்க நாணயம் பரிசு.

ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ் ஞானவேலன் அறிவிப்பால் குஷியான தொண்டர்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ள மதனாஞ்சேரி கிராமத்தில் 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஞானவேலன் தலைமையில் நடைபெற்றது.
இதில் எம்.எல்.ஏக்கள் தேவராஜ், வில்வநாதன் ஆகியோர் கலந்துக் கொண்டு திமுக நிர்வாகிகள் மத்தியில் உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
அப்போதுபேசிய ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஞானவேலன் அதிகமாக உறுப்பினர்களை சேர்க்கும் கிளை நிர்வாகிகளுக்கு தன் சொந்த பணத்தில் இருந்து 8 கிராம் தங்க நாணயம் என்று அறிவித்தார் இதை கேட்ட திமுக தொண்டர்கள் மத்தியில் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
CATEGORIES அரசியல்
TAGS ஆலங்காயம்ஆலங்காயம் மேற்கு ஒன்றியம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திமுகதிமுக கோடி உறுப்பினர்கள் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம்திருப்பத்தூர் மாவட்டம்மதனாஞ்சேரி கிராமம்முக்கிய செய்திகள்