BREAKING NEWS

திமுக, அதிமுக, காங்கிரஸ் மனுக்கள் ஏற்பு…! 7 பேரின் வேட்புமனு நிராகரிப்பு.

திமுக, அதிமுக, காங்கிரஸ் மனுக்கள் ஏற்பு…! 7 பேரின் வேட்புமனு நிராகரிப்பு.

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுக,அதிமுக, காங்கிரஸ் கட்சி சார்பாக 6 பேரும், சுயேட்சைகள் 7 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், சுயேட்சை வேட்பாளர்கள் 7 பேரின் மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார்.

 

மாநிலங்களவைக்கு 15 மாநிலங்களில் 57 எம்.பி.க்களின் பதவி இடங்களும், தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளின் காலம் முடிவடைகிறது. திமுக சார்பாக ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், ராஜேஸ்குமார்; அதிமுகவில் நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர். பாலசுப்பிரமனியன், விஜயகுமார் ஆகியோர் பதவிக் காலம் முடிவடைகிறது. இதற்கான தேர்தல் வருகிற 10 ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்களின் பலத்தில் இந்தப் பதவிகள் நிரப்பப்பட உள்ளன. ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. தமிழக சட்டப்பேரவையில் திமுக கூட்டணிக்கு 159 எம்.எல்.ஏ.க்கள் உள்ளன. அதிமுக கூட்டணிக்கு 70 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பாமகவுக்கு 5 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.இதே போல பாஜகவிற்கு 4 இடங்கள் உள்ளது.

இதனையடுத்து திமுக சார்பாக 4 பேரும், அதிமுக சார்பாக 2 இடங்களும் கிடைக்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து திமுக சார்பாக போட்டியவுள்ள வேட்பாளர்களின் பெயரை திமுக தலைமை வெளியிட்டது. அதில் கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜனுக்கு ஒதுக்கப்பட்ட ஆகியோரின் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதே போல காங்கிரஸ் கட்சி சார்பாக ப.சிதம்பரமும், அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சரும் விழுப்புரம் மாவட்டச் செயலாளருமான சி.வி. சண்முகமும்; முதுகுளத்தூர் ஒன்றிய கழக செயலாளரும் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவருமான ஆர். தர்மர் ஆகியோர் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதே போல மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட 7 சுயேட்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

 

இதனையடுத்து மாநிலங்களவை தேர்தல் வேட்பு மனு பரிசீலனை சட்ட பேரவை செயலரும் தேர்தல் அதிகாரியுமான சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. திமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த கிரிராஜன், தஞ்சை கல்யாணசுந்தரம், ராஜேஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர் அதிமுக வேட்பாளர்கள் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் சார்பில் வழக்கறிஞர்கள் திரு. I.S.இன்பதுரை, பாலமுருகன், பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர் காங்கிரஸ் கட்சி சார்பில் கார்த்திக் சிதம்பரம் மற்றும் மகிளா காங்கிரஸ் தலைவரான சுதா ராமலிங்கம் ஆகியோரும் பங்கேற்றனர். அப்போது திமுக, காங்கிரஸ், அதிமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த 6 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. சுயேட்ச்சைகளாக போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த தேர்தல் மன்னன் பத்மராஜா, வலம்புரி உள்ளிட்ட 7 பேர்மனுக்களை தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார்.மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட 10 சட்டமன்ற உறுப்பினர்கள் முழுமொழிய வேண்டும் ஆனால் சுயேட்சை வேட்பாளர்கள் மனுவில் 10 சட்மன்ற உறுப்பினர்களின் முன்மொழியாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திமுக, அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )