BREAKING NEWS

திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கும் பணி.

திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கும் பணி.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்தில் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நெடுவாசல் கூடலூர் ஊராட்சிகளில் நடைபெற்றது.

 

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்தில் திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா

 

 

மற்றும் கழக பவள விழா ஆண்டுக்காக உடன்பிறப்புக்களாக இணைவோம் என்ற மாபெரும் முன்னெடுப்பு கொண்ட பேரியக்கத்தில் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கும் பணி பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளருமான நிவேதா எம்.முருகன் அறிவுறுத்தலின்படி நடைபெற்று வருகிறது.

 

அந்த வகையில் நெடுவாசல் மற்றும் கூடலூர் ஊராட்சிகளில் ஒன்றிய செயலாளர் எம்.அப்துல்மாலிக் தலைமையில் முகாம் அமைத்து வீடு வீடாக சென்று திண்ணைப் பிரச்சாரம் செய்து துண்டுப்புரசுறம் வழங்கி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்றது.

 

 

இதில், ஒன்றிய பொருளாளர் ரெங்கராஜ், மாவட்ட பிரதிநிதிகள்
கே பி ராஜா, கே எஸ் எஸ் கருணாநிதி, நெசவாளர் அணி அமைப்பாளர் ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் உமாராணி, பைலட், மற்றும் கழக நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தன

CATEGORIES
TAGS