திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம்

திருச்சி மாநகராட்சி 36 வது வார்டு சார்பில் அரியமங்கலம் அம்பிகாபுரம் தனியார் பள்ளியில் திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு காட்டூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைந்து மருத்துவ முகாம் நடந்தது.
மருத்துவ முகாமிற்கு 36வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் தலைமை வகித்தார். அரியமங்கலம் பகுதி செயலாளர் நீலமேகம் முன்னிலையில் வகித்தார். திருச்சி மண்டலம் மூன்று தலைவர் மதிவாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
மருத்துவர்கள் பக்ருதீன், ரஷ்யாதேவி, அசோகன் ஆகியோர் தலைமையிலான மருத்து குழுவினர் ரத்த அழுத்தம்,ரத்த பரிசோதனை, தடுப்பூசி, இதயம், கண், ஸ்கேன், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் நோய், எக்ஸ்ரே, மக்களை தேடி மருத்துவம் காசநோய் மருத்துவ எக்ஸ்ரே, சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்பட்டது.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
அப்பொழுது மண்டல தலைவர் மதிவாணனிடம் தீபாவளி சமயத்தில் திருச்சி போத்தீஸ் அருகே ஹீலியம் சிலிண்டர் வெடித்து விபத்தில் சிக்கிய அம்பிகாபுரத்தை சேர்ந்த சித்ரா என்பவரின் மகன் ஜீவா (13)என்ற ஒன்பதாம் வகுப்பு படித்த மாணவன் பலத்த காயமடைந்தான்.
அவன் தற்பொழுது வரை அந்த காயத்திலிருந்து முழுமையாக மீளவில்லை அவனது ஒரு கண் முற்றிலும் பார்வை இழந்து விட்டதாகவும் மற்றொரு கண்ணும் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவனுக்கு சிகிச்சை வேண்டும் என மண்டல தலைவர் மதிவாணனிடம் சிறுவனின் தாய் சித்ரா முறையிட்டார்.
அவரது பிரச்சினையை உன்னிப்பாக கவனித்துக் கொண்ட மதிவாணன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த முகாமில் திமுக நிர்வாகிகளும் அரசு ஊழியர்களும் கலந்து கொண்டனர்.