திருக்கடையூரில் மாடு குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம்- வண்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து- இருவர் காயம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் புகழ்பெற்ற மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் காணும் பொங்கலான இன்று நடைபெற்று வருகிறது. இந்த பந்தயத்தில் முதலில் சிறிய, நடு, பெரிய மாட்டு வண்டிகளுக்கான பந்தயம் நடைபெற்றது.
தொடர்ந்து புதுக் குதிரை, கரிச்சான், நடு, பெரிய குதிரைகளுக்கான பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தின் போது அதிவேகமாக ஓடிய நடு மாட்டு வண்டிகள் மோதி கொண்டதில் பூவத்தைச் சேர்ந்த மாட்டு வண்டி ஜாக்கி முருகேசன்.53. என்பவரும், பார்வையாளரான செம்பனார்கோவில் மகாராஜன்.58. என்பவரும் காயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து நடைபெற்ற குதிரை வண்டிகளுக்கான போட்டியின் போது குறுகலான மகிமலை ஆறு பாலத்தின் வளைவில் கரிச்சான் குதிரை வண்டிகள் சீறிப் பாய்ந்த போது ஒன்றன்பின் ஒன்றாக வந்த ஆறு குதிரை வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் ஜாக்கிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.