திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலை ஏந்தி பவணி

தஞ்சை மாவட்டம்
திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலை ஏந்தி பவணி
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இப்பேராலயம் 10 பசிலிக்காவில் ஒன்றாகவும், கிறிஸ்தவர்கள் வெளி மாநிலம் வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தருகிறார்கள்
தவக்காலத்தை முன்னிட்டு இன்று குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. முன்னதாக செபஸ்த்தியார் மேடையிலிருந்து அதிபர் பி.ஜே. சாம்சன் குருத் தோலைகளை புனிதப் படுத்தி பவனியை துவக்கி வைத்தார். இதில் பங்கு மக்கள் சுற்றுவட்டார கிறிஸ்தவர்கள், வெளியூரிலிருந்து வந்திருந்த அன்னையின் பக்தர்கள் பவனியாக வீதி வழியாக வந்து பே ராலயத்தை அடைந்து பின்னர் அதிபரும், பங்கு தந்தையுமான சாம்சன் தலைமையில் துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், உதவி பங்கு தந்தைகள், ஆன்மீக பங்கு தந்தைகள், குருத்தோலை ஞாயிறு சிறப்புத்திருப்பலியை நிறைவேற்றினார்கள். குருத்தோலை ஞாயிறு திருப்பலியில் பங்கு மக்கள் சுற்றுவட்டார அன்னையின் பக்தர்கள் திருப்பலியில் கலந்து கொண்டு இறையாசிர் பெற்று சென்றனர்.
