திருச்சியில் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற தரங்கம்பாடி மாணவிக்கு பாராட்டு.
காரைக்கால் மாவட்டம் பூவம் டி எம் ஐ சென்ட் ஜோசப் குளோபல் பள்ளியில் படிக்கும், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா விநாயகர்பாளையத்தில் வசிக்கும் கிருஷ்ணனின் மகள் கனிஷ்கா திருச்சியில் உள்ள டிஎப்டி குரூப் ஆப் இன்ஸ்டிட்யூட் சார்பில் நடத்திய பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில் இவர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றார்.
மாணவி கனிஷ்காவை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக ஹயர்கூட்ஸ் உரிமையாளர் சங்கத்தின் பொருளாளரும், தரங்கம்பாடி முன்னாள் பேரூர் கவுன்சிலருமான மாணிக்க.அருண்குமார், யுவஸ்ரீ ஏஜன்ஸி உரிமையாளர் நந்தகுமார், உடற்கல்வி ஆசிரியர் சாமிநாதன் உமா கம்யூனிகேசன் உரிமையாளர் சசிக்குமார், அரிமா சங்க பொருளாளர் புரட்சிதாசன், சென்டிரியோ லீடர் தினேஷ்குமார், செல்வக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பதக்கம் அணிவித்தும், சான்றிதழ் வழங்கி, பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.