BREAKING NEWS

திருச்சி அருகே இருமலுக்கு ஆவி பிடித்த சிறுமி உயிர் இழப்பு.

திருச்சி அருகே இருமலுக்கு ஆவி பிடித்த சிறுமி உயிர் இழப்பு.

துறையூர் அருகே இருமலுக்கு ஆவி பிடித்த போது ஐந்து வயது சிறுமி மூச்சு திணறி உயிரிழந்தது.

 

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கொப்பம்பட்டியை சேர்ந்தலாரி டிரைவர் குமார் இவரது மகள் துர்க்கா ஸ்ரீ (4) இவர் வைரிச்சட்டி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார்.

 

இந்நிலையில் நேற்று உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும் சளி இருமல் அதிகமாகவும் இருந்துள்ளது. கொப்பம்பட்டியில் உள்ள தனியார் மெடிக்கலுக்கு பெற்றோர் அழைத்துச் சென்று சளிக்காக ஆவி பிடித்துள்ளனர். மேலும் அங்கிருந்து டாக்டர் பரிந்துரையின்றி மருந்து மாத்திரைகளும் வாங்கி சென்றுள்ளனர்.

 

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வீட்டிலேயே இறந்து விட்டதாக தெரிகிறது. இது பற்றி தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் பள்ளி மாணவியின் இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS