திருச்சி காவிரி பாலம் 15 நாட்களில் போக்குவரத்துக்கு திறக்கப்படும்; ஆட்சியர் பிரதீப் குமார் உறுதி.

திருச்சி,
திருச்சி காவேரி பாலம் 15 நாட்களில் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கூறினார்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் உயர் கல்வி பயிலும் மாணவியருக்கு மாதாந்திர உதவித் தொகை ரூ.1000/- பெறுவதற்கு பற்று அட்டைகள் 1730 மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டையை வழங்கினார். இதில் திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் நித்யா உள்ளிட்ட அதிகாரிகள் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் 1730 மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டை வழங்கப்பட்டது. மராமத்து பணிகள் நடைபெற்று வரும் காவிரி பாலம் இன்னும் 15 நாட்களுக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும்,
தவறிய மழையால் திருச்சி மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட சம்பா பயிர்கள் 81 ஏக்கர் மட்டுமே கணக்கெடுக்கப்பட்டுள்ளது இன்னும் ஓரிரு நாட்களில் முழுமையாக கணக்கெடுக்கப்பட்டு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.