திருச்சி திருவெறும்பூர் அருகே கூத்தைப்பார் கிராமத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது 800 காளைகளும் 420 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கூத்தைப் பாரில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு போட்டு நடத்துவது வழக்கம்.
இதனை முன்னிட்டு இந்த வருடம் கூத்தைப்பார் மந்தையில் ஜல்லிக்கட்டு போட்டியானது இன்று துவங்கியது போட்டியை ஆர்டிஓ தவச்செல்வம் துவக்கி வைத்தார்.
முதல் காளையாக முனியாண்டவர் கோவில் மாடு அவிழ்த்து விடப்பட்டது. இந்த போட்டியில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 800 மாடுகளும், 420 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
மாடுகளுக்கு கால்நடை மருத்துவர் மருத ராஜ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து வருகின்றனர். அரசு மருத்துவர் பாலாஜி தலைமையிலான மருத்துவ குழுவினர் மாடுபிடி வீரர்களை பரிசோதனை செய்து வருகின்றனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஏடிஎஸ்பி முத்தாலிங்கம் தலைமையில் 353 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.