திருச்சி பிஹெச்இஎல் நிறுவனத்தில் மருத்துவ ஆக்சிஜன் ஆலை திறக்கப்பட்டது.

திருச்சி,
பிஹெச்இஎல் திருச்சிராப்பள்ளியின் முதன்மை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ ஆக்சிஜன் ஆலைலை பிஎச்இஎல் திருச்சிராப்பள்ளியின் செயல்பாடுகளுக்கான பொது மேலாளர்-பொறுப்பு ராமநாதன் இன்று திறந்து வைத்தார்.
நிமிடத்திற்கு 500 லிட்டர் (30 கன மீட்டர்) வழங்கும் திறன் கொண்ட இந்த மருத்துவத் தர ஆக்சிஜன் உற்பத்தி ஆலை,
ஹைதராபாத்தில் உள்ள பிஹெச்இஎல்-ன் கனரக மின்னுபகரண ஆலையால், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் டேராடூனில் இயங்கி வரும் இந்திய பெட்ரோலியக் கழகத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

பிஹெச்இஎல் திருச்சிராப்பள்ளியின் பராமரிப்பு மற்றும் சேவைகள், நவீன மயமாக்கல் மற்றும் கட்டமைப்புத் துறைகளால் ஆலையின் நிறுவுதல் மற்றும் இயக்கி வைத்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆக்ஸிஜனின் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் பிஹெச்இஎல் திருச்சிராப்பள்ளியின் முதன்மை மருத்துவமனைக்கு மருத்துவ ஆக்சிஜனை வழங்குவதற்கு இந்த ஆலை துணைபுரியும். தற்போது, மருத்துவமனைக்கான மருத்துவ ஆக்சிஜன் சப்ளை வெளி வழங்குநர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் பொது மேலாளர்கள் மருத்துவ கண்காணிப்பாளர் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
