BREAKING NEWS

திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 17 காளைகளை அடக்கி பூபாலனுக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பைக் பரிசு வழங்கினார்.

திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 17 காளைகளை அடக்கி பூபாலனுக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பைக் பரிசு வழங்கினார்.

 

திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 17 காளைகளை அடக்கி பூபாலன் என்பவர் முதலிடம் பிடித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வழங்கிய இருசக்கர வாகனத்தை பரிசாக வென்றார். 

இந்த போட்டியில் 62 பேர் காயம் ஒருவர் உயிரிழப்பு..

 

திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது திருச்சி திருவெறும்பூர்,பெரிய சூரியூரில் இன்று நடைபெற்றது.

 

 

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 610 காளைகளும், 314 வீரர்களும் கலந்து கொண்டனர்.

 

இன்று காலை 7.45 மணியளவில் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.  

 

 

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தார்.

 

ஏழு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியின் இறுதியில், 17 காளைகளை அடக்கிய பெரிய சூரியூரைச் சேர்ந்த பூபாலன் என்பவர் முதல் பரிசை வென்றார். அவருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. 

 

 

 வெற்றி பெற்றவருக்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இருசக்கர வாகனத்தின் சாவியை வழங்கினார். இது தவிர அவ்வப்போது மாடுகளை அடக்கும் வீரர்களுக்கும், திறமையாக விளையாடிய மாட்டிற்கும் வெள்ளி காசு, தங்க மோதிரம், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டது. 

 

இந்த போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 63 பேர் காயமடைந்தனர். அதில் 11 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

 

அந்த 11 பேரில் பார்வையாளராக வந்த புதுக்கோட்டையை சேர்ந்த அரவிந்த்(25) என்கிற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இந்த போட்டிக்காக திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையில் 300 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

 

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அவர்கள் நேரில் வந்து கண்டு ரசித்து போட்டிக்கு வந்த மாடுபிடி வீரர்களையும் மாட்டின் உரிமையாளர்களையும் உற்சாகப்படுத்தினார்.

 

 

CATEGORIES
TAGS