BREAKING NEWS

திருச்சி பொன்மலை புனித சூசையப்பர் தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு சிறப்பு பவனி நடைபெற்றது.

திருச்சி பொன்மலை புனித சூசையப்பர் தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு சிறப்பு பவனி நடைபெற்றது.

திருச்சி பொன்மலை புனித சூசையப்பர் தேவாலயத்தில் குருத்தோலை பவனி.

 

கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது.
கிறிஸ்தவ மதத்தினர் ஈஸ்டர் திருநாளுக்கு முன்பு கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் தவக்காலம் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி சாம்பல் புதன் திருநாளுடன் தொடங்கியது.

 

 

இந்த தவக்காலத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு திருநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் ஏப்ரல் 2ம் தேதியான இன்று அனைத்து தேவாலயங்களிலும் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு சிறப்பு திருப்பலி மற்றும் குருத்தோலை பவனி நடைபெற்றது.

 

 

ஜெருசலேம் நகரில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இயேசு கிறிஸ்துவை கோவேறு கழுதையில் ஏற்றி சிறுவர் சிறுமியர் உள்பட அனைத்து பெரியோர்களும் சேர்ந்து ஒலிவ மரக்கிளைகளைக் கையில் ஏந்தி தாவிது மகனுக்கு ஓசன்னா ஆண்டவர் பேரால் வருபவர் ஆசி பெற்றவர் என ஆர்ப்பரித்துக் கூறி பவனி வந்தனர்.

 

 

இந்நிலையில் அதனை நினைவு கூறும் வகையில் திருச்சி பொன்மலையில் உள்ள புனித சூசையப்பர் தேவாலயத்தில் பங்குத்தந்தை முன்னிலையில் சிறப்பு திருப்பலி அதன் பின்னர் குருத்தோலை ஏந்தி கிறிஸ்த மக்கள் ஆலயத்தை சுற்றி பவனியாக வந்தனர். இந்த குருத்தோலை பவனியில் அப்பகுதியில் உள்ள ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS