BREAKING NEWS

திருச்சி மாநகர் மாவட்ட அ.ம.மு.க செயலாளராக கவுன்சிலர் செந்தில்நாதன் நியமனம்.

திருச்சி மாநகர் மாவட்ட அ.ம.மு.க செயலாளராக கவுன்சிலர் செந்தில்நாதன் நியமனம்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொருளாளராகவும் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராகவும் இருந்த முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர் மனோகரன் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்து விட்டார்.

 

இதனை எடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பாசறை தலைவராக இருந்து வந்த திருச்சி 47 வது வார்டு கவுன்சிலர் செந்தில் நாதனை திருச்சி மாநகர் மாவட்ட அமமுக மாவட்ட செயலாளராக கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் நியமித்துள்ளார்.

 

மேலும் அவரை இளைஞர் பாசறை பொறுப்பில் இருந்து விடுவித்தவுடன் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் அவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்குமாறு டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share this…

CATEGORIES
TAGS