BREAKING NEWS

திருச்சி மாவட்டம் துவாக்குடி வடக்கு மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மேள தாளங்கள் மற்றும் ஆடல் பாடலுடன் உற்சாக வரவேற்பு.

திருச்சி மாவட்டம் துவாக்குடி வடக்கு மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மேள தாளங்கள் மற்றும் ஆடல் பாடலுடன் உற்சாக வரவேற்பு.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறைக்கு பிறகு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேற்று முதல் வகுப்புகள் தொடங்கியது.

இதில் அந்த பள்ளியில் முதலாம் வகுப்பில் புதிதாய் சேர்ந்த மாணவ மாணவிகளை மேளதாளங்கள் முழங்க மங்கள வாத்தியத்துடன் ஆசிரியர்களும் பெற்றோர்களும் பள்ளிக்கு அழைத்து வந்தனர். பள்ளியின் நுழைவாயிலில் மாணவ மாணவிகளுக்கு ஆரத்தி எடுத்து சந்தனம் குங்குமம் திலகம் இட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் புத்தகப்பை, சீருடை, எழுது பொருட்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வட்டார கல்வி அலுவலர் ரெஜி பெஞ்சமின், தலைமையாசிரியர் கருணாம்பாள் ஆகியோர் வழங்கி மாணவ மாணவிகளை வகுப்பறைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு ரிப்பன் வெட்டி வகுப்பறைக்குள் நுழைந்த மாணவ மாணவிகள் , ஆசிரியருடன் சேர்ந்து கேக் வெட்டி வகுப்பை தொடங்கினர்.

இதனிடையே பள்ளி தலைமை ஆசிரியர் கருணாம்பாள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பாடல் பாடி வரவேற்றார்.
இதில் முதலாம் வகுப்பு மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன் தங்களது ஆரம்பப் பள்ளி படிப்பை தொடங்கினர்.
இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், தன்னார்வலர்கள், இல்லம் தேடி கல்வி அமைப்பினர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS