திருச்சி மாவட்ட மேஜை பந்து போட்டி துவக்க விழா..!

திருச்சி ஜில்லா நாயுடு மகாஜன சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட மேஜை பந்து வளர்ச்சி கழகம் இணைந்து ஐந்தாவது திருச்சி மாவட்ட தகுதி நிர்ணய மேஜை பந்து போட்டிகளை நடத்தினர்.
துவக்க விழாவிற்கு திருச்சி ஜில்லா நாயுடு சங்க தலைவர் விஜயகுமார் நாயுடு தலைமை வகித்தார். செயலர் கோவிந்தராஜூலு, பொருளாளர் பிரபு ராம் முன்னிலை வகித்தனர். மேஜை பந்து கழக தலைவர் பொன்னுரத்தினம் வரவேற்பு உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்து பேசினார். போட்டிகளில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பள்ளி கல்லூரி மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 400 வீரர் வீராங்கனைகள் இந்த போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
மினி கேடட், கேடட் , சப் ஜூனியர், ஜூனியர், யூத், மாஸ்டர் ,பெண்கள் மற்றும் ஆடவர் மற்றும் இரட்டையர்.போட்டிகள் நடைபெறுகிறது.