BREAKING NEWS

திருச்செந்தூர் கடல் 100 அடி தூரம் உள்வாங்கியது!

திருச்செந்தூர் கடல் 100 அடி தூரம் உள்வாங்கியது!

ஆடி அமாவாசை தினமான இன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரையில் கடல் நீர் சுமார் 100 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள் மற்றும் அதற்கு முந்தைய, பிந்தைய நாட்களில் கடல்நீர் உள்வாங்குவதும், பின்னர் இயல்புநிலைக்கு திரும்புவதும் வழக்கமாக உள்ளது.

ஆடி அமாவாசையான இன்று கடல் சுமார் 100 அடி உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பச்சை நிற பாசிபடிந்த பாறைகள் வெளியே தெரிந்தது.

கடல் அலைகள் இன்றி பச்சை நிறத்தில் குளம் போல் காட்சியளித்தது. எனினும் பக்தர்கள் எந்த வித அச்சமும் இன்றி வழக்கம்போல் கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

Share this…

CATEGORIES
TAGS