“திருடு போன செல்போனை கண்டு பிடித்த காவல்துறை!!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் திருட்டு போன கைபேசிகளை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் ராணிப்பேட்டை Cyber cell காவலர்கள் ராஜ்குமார், (Grl 465) சத்ரியன் (PC 718) ஆகியோரால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் காணாமல்போன சுமார் 10,78,000/- மதிப்புள்ள 62 செல்போன்கள்கண்டறியப்பட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V.கிரண்ஸ்ருதி அவர்களால் உரியவர்களிடம் ஓப்படைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துகருப்பன் (இணைய வழி குற்றப்பிரிவு), துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் கோட்டீஸ்வரன் (பெண்கள் வன்கொடுமை தடுப்பு பிரிவு), ரவிசந்திரன் (மாவட்ட குற்றப்பிரிவு) மற்றும் ராஜாசுந்தர் (மாவட்ட குற்ற ஆவணக் காப்பகம்) ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
பிரபு (ராணிப்பேட்டை உட்கோட்டம்), மேலும் இதேபோன்று கடந்த 2021-ம் ஆண்டு மட்டும் சுமார் ரூ. 6,47,500/- மதிப்புள்ள 50 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம்
ஒப்படைக்கப்பட்டது என குறிப்பிடத்தக்கது.
மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்