BREAKING NEWS

திருத்தணி அரசு இ-சேவை மையத்தில் அரசால் செயல்படுத்தப்படும் சேவைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

திருத்தணி அரசு இ-சேவை மையத்தில் அரசால் செயல்படுத்தப்படும் சேவைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி செயல்படுத்தப்படும் சேவைகளை மாவட்ட அரசு இ-சேவை மையத்தில் அரசால் ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், தமிழக அரசால் அறிவிக்கின்ற சேவை மற்றும் திட்டப் பணிகளையும் விரைந்து செயல்படுத்த வேண்டும். அத்தகைய பணிகள் தரமாகவும். விரைவாகவும் அமைப்பதை உறுதி செய்கின்ற வகையில் அரசு உயர் அலுவலர்கள் ஆய்வு செய்து, உறுதி செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

 

அந்த வகையில், இ-சேவை மையங்களில் வருவாய்த்துறை மூலம் அளிக்கப்படும் சாதி சான்றிதழ். இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், விவாகாரத்தான பெண்களுக்கான சான்றிதழ், விவசாயிகளுக்கான வருமான சான்றிதழ், குடும்ப உறுப்பினர்களுக்கான சான்றிதழ்,

 

வேலையில்லா பட்டதாரி சான்றிதழ், விதவை பெண் சான்றிதழ், பிறப்பு சான்றிதழ். இறப்பு சான்றிதழ், தேசிய இந்திராகாந்தி திட்டத்தில் ஓய்வூதியரிகளுக்கான சான்றிதழ், தேசிய இந்திராகாந்தி திட்டத்தில் விதவை பெண்களுக்கான ஓய்வூதிய சான்றிதழ், தேசிய இந்திராகாந்தி திட்டத்தில் ஊனமுற்றோருக்கான ஓய்வூதிய சான்றிதழ், உடல் ஊனமுற்றவர்கள் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விவாகாரத்தான பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம், திருமணமாகாத பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்றோர் விதவை ஓய்வூதியத் திட்டம், தமிழ் நிலம் முழு பட்டா மாற்றம்,

 

தமிழ் நிலம் – இணைப்பு பட்டா மாற்றம். தமிழ் நிலம் – உட்பிரிவு, தமிழ் நிலம் – ஏ பதிவேடு பிரித்தல், அன்னை தெரசா அம்மையார் நினைவு அனாதை பெண் திருமண திட்டம், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், தருமாம்பாள் அம்மையார் நினைவு மறுதிருமணம் திட்டம், டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண திட்டம், மணியம்மையார் நினைவு திட்டத்தின் கீழ் விதவை பெண்ணின் மகள் திருமணத்திற்கான திருமண உதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திட்டம். மின் கட்டணம்,

 

மேலும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல், குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் செய்தல், நவீன குடும்ப அட்டை அச்சிடுதல், டிஜிட்டல் சேவா மூலம் ஆதார் கார்ட் பிரிண்ட் செய்தல், ஜீவன் பிரம்மான் சான்றிதழ், தோதல் ஆணையத்தின் மூலம் வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்குதல் போன்ற சேவைகள் பொதுமக்களின் நலன் கருதி…

 

எளிதில் பயன்பெற வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு தமிழக அரசால் இச்சேவை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இந்த சேவை மையத்தால் வழங்கப்படும் சேவைகள் பொதுமக்களுக்கு விரைந்து கால தாமதமின்றி வழங்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் செய்தியாளர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )