திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் தேசிய விளையாட்டு தின விழா.

திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் தாமிரபரணி வாசகர் வட்டத்தின் சார்பில் தேசிய விளையாட்டு நாள் விழா
நடைபெற்றது. தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு வாசகர்கள் சார்பில் சிலம்பம், யோகா, ஸ்கிப்பிங் ஆகிய விளையாட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டது. யோகா, சிலம்ப போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத் துணைத் தலைவர். முனைவர்.கோ.கணபதி சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பாரதியார் உலக பொதுச்செயவை நிதிய பொது நிதியாளர் கவிஞர் பாப்பாக்குடி.இரா. செல்வமணி, நூலகப் புரவலர் கவிஞர் சிற்பி பாமா, நூலகப் புரவலர் ஆசிரியர் சோமசுந்தரம், ஓய்வு பெற்ற காவலர் முருகன் ஆகியோர் விளையாட்டு தினத்தை பற்றி கருத்துரை வழங்கினார்.வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நூலக புரவலர் சிற்பி பாமா அவர்களுக்கு நூலகப் புரவலர் சான்றிதழ் வழங்கப்பட்டது.கிளை நூலகர் ம.அகிலன் முத்துகுமார் நன்றி கூறினார்