BREAKING NEWS

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மேயர் துணைமேயர் மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மேயர் துணைமேயர் மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மேயர் பி.எம்.சரவணன் தலைமையில், துணைமேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலையில் மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம் நடைபெற்றது.

 

இம்முகாமில் பாளையங்கோட்டையை சார்ந்த அப்துல்காதர் என்பவர் அளித்த மனுவில் தங்கள் பகுதியில் குடிநீருடன் சாக்கடை கழிவு நீர் கலப்பதை தடுத்து சுகாதாரமான குடிநீர் வழங்கிட வேண்டியும், திருநெல்வேலி அண்ணாநகரை சார்ந்த பெரியசாமி என்பவர் அளித்த மனுவில் தங்கள் வீட்டு குடிநீர் தொட்டியில் பாதாளச் சாக்கடை கலக்கிறது.

 

அதனை சரி செய்து தரவும், தச்சநல்லூர் மந்திரம் என்பவர் அளித்த மனுவில் பெட்டிகடை வைத்து தரவும், மேலப்பாளையம் நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சங்க நிர்வாகி அளித்த மனுவில் மேலப்பாளையம் மண்டலம் கன்னிமார்குளத்திற்கு செல்லும் மாநகராட்சியின் பாதாளச்சாக்கடை நேரடியாக கலப்பதை தடுத்து கரையை ஒட்டி புதிதாக திறந்த வெளி கழிவுநீர்த் தொட்டி அமைத்து பாதாளச்சாக்கடை வெளியே செல்லும் வகையில் அமைத்தல் மற்றும் நிறுவப்பட்ட பாதாளச் சாக்கடை திட்டத்தை செயல்படுத்திடவும்,

 

மேலப்பாளையம் பொது நலக்குழு சார்பில் அளித்த மனுவில் மேலப்பாளையம் அரசு மருத்துவ மனையில் பல்வேறு சிகிச்சை பிரிவுகளுடன் மேம்படுத்தப்பட்ட புதிய அரசு மருத்துவ மனை ஏற்படுத்தி தரவும் மேலப்பாளையம் அகமது உசேன் என்பவர் அளித்த மனுவில் காமான தனது தந்தையின் இறப்பு சான்றிதழை விரைந்து வழங்கிட கேட்டு டவுன் பகுதியினை சார்ந்த சொர்ணம் என்பவர் அளித்த மனுவில் தனக்கு வருமை கோடு நம்பர் வழங்கிட கேட்டும் டவுண் பகுதியினை சார்ந்த ராஜேஷ்குமார் என்வர் அளித்த மனுவில் பழைய வரிவிதிப்பு எண்ணை ரத்து செய்து அதன் கீழ் செலுத்திய வரி தொகையினை புதிய வரி விதி எண்ணிற்கு மாற்றம் செய்ய கேட்டும் போன்ற மனுக்கள் அளிக்கப்பட்டது.

 

பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட மேயர் பி.எம்.சரவணன் சம்பந்தப்பட்ட அலுவர்களிடம் அறிவுறுத்தினார்கள்.

 

இம்முகாமில் செயற் பொறியாளர் எல்.கே.பாஸ்கர், தச்சை மண்டல உதவி ஆணையாளர் வெங்கட்ராமன்,உதவி செயற்பொறியாளர் பைஜூ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )