திருநெல்வேலி மாநகர காவல் துறையினருக்கு உதவியாக பணியாற்றும் வகையில் ஊர்காவல் படையினருக்கு ஆயுதப்படை மைதானத்தில் அளிக்கப்பட்டது.

செய்தியாளர் சங்கர நாராயணன்.
திருநெல்வேலி மாநகரில் காவல் துறையினருக்கு உதவியாக பணியாற்றும் வகையில் ஊர்காவல் படையினர் ஆண்கள் 42, மற்றும் பெண்கள் 7 பேர் உட்பட மொத்தம் 49 நபர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு 19-10-2022 ம் தேதி முதல் கவாத்து மற்றும் பாதுகாப்பு பணிகள் பற்றிய பயிற்சி திருநெல்வேலி மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் அளிக்கப்பட்டது.


ஊர்காவல் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு. அவிநாஷ் குமார் இ. கா. ப, அவர்கள் ஏற்றுக்கொண்டார்.உடன் நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்கள் திரு. V. R. ஸ்ரீனிவாசன் அவர்கள் (கிழக்கு), திரு. திரு. K. சரவணகுமார் அவர்கள் (மேற்கு),


மற்றும் திருமதி. G. S. அனிதா அவர்கள் (தலைமையிடம்) CCRB காவல் உதவி ஆணையாளர் திரு. சரவணன் அவர்கள், மாநகர ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. டேனியல் கிருபாகரன் அவர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டார்கள.
