திருநெல்வேலி மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி

நெல்லை மாநகரம் பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் திருநெல்வேலி மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் தலைமையேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களை பாராட்டி பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீரர்கள் மற்றும் மாணவர்களிடம் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, போதை பழக்கத்தில் ஈடுபட மாட்டோம் என உறுதிமொழி ஏற்க செய்தார்கள்.இதில் நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES திருநெல்வேலி