திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையம் சார்பாக ஆதரவற்ற பிரேதத்தை சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் முன்னிலையில் நல்லடக்கம் செய்தனர்.

திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குடியரசு நகர் பகுதியில் பெயர் விலாசம் தெரியாத நபர் சுயநினைவு இல்லாமல் இருந்தவரை பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து,..
பின் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி 05.11.2022 அன்று இயற்கை எய்திய நிலையில், 16.11.2022 தேதி வரை இறந்தவரின் பிரேதத்தை உரிமை கோரி யாரும் வராத நிலையில்,
மேற்படி ஆதரவற்ற பிரேதத்தை காவல்துறை சார்பில் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் காவலர் சிலம்பரசன் (PC.859) ஆகியோரால் தர்மபுரி சுடுகாட்டில் நல்லடக்கம் செய்தனர்.
சிறப்பாக மனிதநேயத்துடன் செயல்பட்ட திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன்.,BVSc பாராட்டினார்கள்.