திருப்பத்தூர் மாவட்டத்தில் 27.11.2022 அன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் ஆலோசனைக் கூட்டம்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 27.11.2022 அன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) மூலம் இரண்டாம் நிலை காவலருக்கான எழுத்து தேர்வினை மாவட்டத்தில் சுமார் 7318 தேர்வர்கள் எழுதவுள்ள நிலையில்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன்.,BVSc தலைமையில் (25.11.2022) சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உரையாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தேர்விற்கான ஏற்பாடுகள் மற்றும் தேர்வு நடத்தும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்து ஆலோசனை வழங்கினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புஷ்பராஜ், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் 600க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்றனர்.
CATEGORIES திருப்பத்தூர்
TAGS தமிழ்நாடுதமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் ஆலோசனைக் கூட்டம்தலைப்பு செய்திகள்திருப்பத்தூர் மாவட்டம்முக்கிய செய்திகள்