திருப்பத்தூர் மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு சார்பில் தலைவர் திரு.கு. செல்வபெருந்கை தலைமையில் தமிழக முழுவதும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்

இந்த நிலையில், இக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களான ஒய்.பிரகாஷ், ராஜா, வேல்முருகன், தேன்மொழி, ரேவதி, ஆகியோர் கொண்ட குழு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் ஏலகிரி மலையில் புங்கனூர்,அத்தனாவூர் அதேபோல் பொன்னேரி, சின்ன பொன்னேரி, மண்டலவாடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தோட்டக்கலைத் துறை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேளாண்மை துறை ஆதிதிராவிட நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, உள்ளிட்ட துறைகளின் கீழ் பல இடங்களை ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் கழிவுநீர் கால்வாய் அமைத்தல்,ஆரம்ப சுகாதார நிலையம், உள்ளிட்ட பல்வேறு திட்டத்தின் கீழ் அமைத்த பணியினை ஆய்வு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி இனை செயலாளர் தேன்மொழி துணை செயலாளர் ரேவதி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் சத்தியா ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் சதிஷ்குமார் கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிதாதண்டபாணி ஏலகிரிமலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் வட்டார வளர்ச்சி அலுவலர் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.