திருப்பத்தூர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் பிரமுகர் முன்னிலையில் திறக்கப்பட்டது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் மஞ்சா குடோனில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021 ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட இருபறைக்கு கொண்டு வருவதற்கு ஏதுவாக..
மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் பாஸ்கரபாண்டியன் அவர்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரமுகர்கள் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டு, இருப்பில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
உடன் வட்டாட்சியர் திரு.சிவப்பிரகாசம், தனி வட்டாட்சியர் தேர்தல் பத்பநாபன், தேர்தல் பிரிவு பணியாளர்கள், அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் என பலரும் உடன் இருந்தனர்.
CATEGORIES திருப்பத்தூர்
TAGS அரசியல்தமிழ்நாடுதமிழ்நாடு அரசுதலைப்பு செய்திகள்திருப்பத்தூர்திருப்பத்தூர் மஞ்சா குடோன்திருப்பத்தூர் மாவட்டம்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்முக்கிய செய்திகள்