திருப்பனந்தாள் அருகே ரூ 60. லட்சம் மதிப்பீட்டில் அரசு பள்ளி வகுப்பறை கட்டிட தொடக்க விழா.
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் அருகே அணைக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ. 30 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பீட்டில் பள்ளி வகுப்பறை கட்டிடமும், இது போல் கதிராமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யபட்டது. இதனையொட்டி அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது.
விழாவிற்கு ஒன்றியக் குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன், துணைத் தலைவர் கோ.க.அண்ணாதுரை தலைமை தாங்கினர். ஒன்றிய செயலாளர்கள் ரவி உதயசந்திரன், மிசா மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அரசு கொறடா கோவி.செழியன், எம்.பிக்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டு வைத்து கட்டிட பணிகளை தொடங்கிவைத்தனர்.
விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் இளஞ்செழியன், ஒன்றிய துணை செயலாளர் சாமிநாதன், மாவட்ட பிரதிநிதி சண்முகம், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.