திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிம் குறிச்சி ஊராட்சியில், உலக கழிப்பறை தின தூய்மை நடைப்பயணம்.

தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியம் குறிச்சி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் தலைமையில் தூய்மை நடைப்பயணம் நடைபெற்றது.
துணைத் தலைவர் கணேசன், ஒன்றிய குழு உறுப்பினர் சரஸ்வதி கோபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உலக கழிப்பறை தினம் கழிப்பறை குறித்து பேச தயங்கிய நிலை மாறி தற்போது விழிப்புணர்வு அதிகரித்து வருகின்றது. கிராம வளர்ச்சியில் சுகாதாரமும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
கழிவறையின் முக்கியத்துவத்தை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக பல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத நிலையை உருவாக்கவும் சாலைகளையும் பொது இடங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவும்,
கிராம வளர்ச்சியில் சுகாதாரமும் மிக முக்கிய பங்கு வகிப்பதால் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னையும் தன்னை சுற்றி உள்ளவர்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
அதேசமயம் உலக கழிப்பறை தினத்தில் அதன் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்த வேண்டும், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதற்கு நம் வீட்டை மட்டுமல்லாமல் நமது சுற்றுப்புறத்தையும் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும்.
எனவே இந்த தினத்தில் துப்புரவு பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தூய்மை நடைப்பயணம் நடைப்பெற்றது.
முகாமில் உறுப்பினர்கள், ஒன்றிய அலுவலர் கண்ணகி, ஊராட்சி செயலர் பூமிநாதன்,கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.