திருப்பூர், சாலை பணிகளை ஆமை வேகத்தில் நடைபெறுவதாக கூறி அதிகாரிகளை பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு பிறப்பித்த சட்டமன்ற உறுப்பினர்.

திருப்பூரில் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உற்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை பணிகளை ஆமை வேகத்தில் நடைபெறுவதாக கூறி அதிகாரிகளை வெளுத்து வாங்கிய தெற்கு சட்டமன்ற உறுப்பினர். செல்வராஜ்.-அதிகாரிகளை வெளுத்து வாங்கி பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு பிறப்பித்த சட்டமன்ற உறுப்பினருக்கு பொது மக்கள் பாராட்டு.

திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் சாலை அமைக்கும் பணி கோயில்களுக்கு முன்பாக மேற்கூரை அமைக்கும் பணி என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கல்லூரி சாலையில் உள்ள அய்யப்பன் கோவில் முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 7 தேதி மேற்கூரை அமைப்பதற்கு 31.5 லட்சம் ரூபாய் மதிப்பில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடரப்பட்டது.
இந்நிலையில் பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளை தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் க.செல்வராஜ், மாநகராட்சி மேயர்.தினேஷ் குமார் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இரண்டு மாத காலம் ஆகியும் எந்த விதமான பணிகளும் மேற்கொள்ள வில்லை என்றும் அதிகாரிகளும், டெண்டர் எடுத்தவர்களும் மெத்தனமாக செயல் படுவதாகவும் கூறி அதிகாரிகளையும் டெண்டர் உரிமையாளரையும் வெளுத்து வாங்கினார்.

மேலும் மேற்கூரை அமைக்கும் பணிகளை ஒரு மாத காலத்திற்குள் விரைந்து முடித்து மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அதிகாரிகளை வெளுத்து வாங்கிய சட்டமன்ற உறுப்பினருக்கு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
