திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தங்கம்மாள் ஓடை பகுதியில் குடியிருந்தவர்களின் வீடுகளை காலி செய்ய வைத்து ஏமாற்றிய மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சியினர்.

உடுமலைப்பேட்டை தங்கம்மாள் ஓடை பகுதியில் பல ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வந்த 40 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 2016ஆண்டு நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு என கூறி அங்கிருந்த பொதுமக்களுக்கு வேறு இடத்தில் குடியிருப்பதற்கு நிலம் தருவதாக கூறி கடந்த அதிமுக ஆட்சியில் காலி செய்ய வைத்து அதன் பின் புக்குளம் பகுதியில் 48குடும்பங்களுக்கு 1.1/2 ஏக்கர் நிலத்திற்கு அப்போது இருந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் வீட்டுவசதி வாரியதுறை அமைச்சர் உடுமலை K.ராதாகிருஷ்ணன் தலைமையில் இலவச பட்டா வழங்கப்பட்டது.
பின்பு தங்கம்மாள் ஓடை பொதுமக்கள் புக்குளம் பகுதியில் சென்று அந்த இடங்களை வீடுகள் அமைக்க சென்றபோதுஇந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தங்களுக்கு தருவதாக அது சம்பந்தமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் அங்கு கட்டப்பட்ட 350 வீடுகளில் ஒரு வீட்டிற்கு ஐம்பதாயிரம் கட்டினால் போதும் என அப்போது இருந்த அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
அதிமுக ஆட்சி மாறிய பின்புஒரு வீட்டிற்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளனர். தற்போது தங்கம்மாள் ஓடிப் பகுதியில் உள்ள வீடுகளை காலி செய்து ஏமாந்து இருக்கும் பொதுமக்கள் இது சம்பந்தமாக வீட்டு வசதி வாரியத் துறை நகராட்சி நிர்வாகம் முன்னாள் அமைச்சர்மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும்,..
தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் நகர்மன்ற உறுப்பினர் அனைவரிடமும் இது பற்றி தெரிவித்து தங்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து புக்குளம் பகுதியில் உள்ளஅடுக்குமாடி குடியிருப்புகளில் தங்களுக்கு வீடுகள் ஓட்டுக்கு தர வேண்டும் என்றும் இல்லையென்றால் கொடுத்த பட்டாவிற்கு ஏற்றால்போல் வேறு இடத்தில் இடம் ஒதுக்கி நவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் ஏழை கூலித்தொழிலாளிகள் ஆகிய எங்களை நம்பவைத்து ஏமாற்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடியிருக்க வீடு அல்லது நிலம் கொடுக்கவில்லை என்றால் எங்களுக்கு கொடுத்த பட்டாவை வைத்து பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், மறியல் போரட்டங்கள் நடத்துவோம் என தெரிவித்தனர்.