BREAKING NEWS

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த சோமவாரப்பட்டி ஆள்கொண்டம்மாள் கிருஷ்ணர் கோவிலில் ஏற்படும் முறைகேடுகள் கண்டுகொள்ளாத கோவில் நிர்வாகம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த சோமவாரப்பட்டி ஆள்கொண்டம்மாள் கிருஷ்ணர் கோவிலில் ஏற்படும் முறைகேடுகள் கண்டுகொள்ளாத கோவில் நிர்வாகம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த சோமவாரப்பட்டி  ஆல் கொண்ட மால் திருக்கோவில் தைத்திருநாள் காணும் பொங்கல் அன்று வெகு சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கமான ஒரு விசேஷமாக உள்ள நிலையில்,..

 

 

இக்கோவிலில் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களாக மண் உருவ பொம்மைகளை வைத்து வழிபாடு செய்வது முறையாகும் ஆனால் கோவிலில் இருக்கும் அர்ச்சகர்கள் விபூதி தட்டில் காணிக்கை செலுத்த சொல்லி,..

 

 

கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் வாங்குவதும் கோவிலின் பின்புறம் உள்ள ஜன்னல் வழியாக பிரசாதங்கள். அபிஷேகப் பால் உள்ளிட்டவையை காசுக்கு விற்பதாகவும் கோவில் நிர்வாகத்திடம் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

மேலும் மண்ணு உருவ பொம்மைகளை வேண்டுதலுக்காக கோவிலுக்குள் கொண்டு வந்துவைக்கப்படுவதை மீண்டும் அவற்றை எடுத்து வெளியில் உள்ள கடைக்காரர்களுக்கு விற்பனை செய்வதாகவும்,

 

 

அந்த உருவ பொம்மைகளை மீண்டும் நேர்த்தி கடனுக்காக வாங்கி வந்து காணிக்கை செலுத்து செல்வதாகவும் பெரும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர் இது குறித்து கோவில் நிர்வாகம் தவிர்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

CATEGORIES
TAGS