திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தென்னை தொழிலாளர்கள் முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டம்.
திருப்பூர் மாவட்டம் மற்றும் கோவை மாவட்டம் பகுதியில் தென்னை சார்ந்த பணிகளில் பல ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்
சமீபகாலமாக வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் அதிக அளவில் குடும்பத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
வடமாநில தொழிலாளர்கள் குறைந்த கூலிக்கு வேலை செய்வதால் தமிழ்நாட்டு தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். அதனை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
தென்னை தொழிலாளர்கள் வாரியம் அமைத்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வழியுறித்தி உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்து வருவாய் கோட்டாச்சியரிடம் மனு கொடுத்தனர்.
இதில் தளி, குறிச்சிக்கோட்டை ஜல்லிப் பட்டி. தென்னை தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
CATEGORIES திருப்பூர்
TAGS உடுமலைப்பேட்டைஉடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பூர் மாவட்டம்தென்னை தொழிலாளர்கள் வாரியம்முக்கிய செய்திகள்