திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் காற்றில் பறக்கும் பொதுமக்களின் ஆவணங்கள்.
உடுமலைப்பேட்டை நகராட்சியின் அலட்சியப் போக்கால் அலுவலகத்தில் தனிமனிதபாதுகாப்பும், தேர்தல் ஆணைய படிவங்கள், பிறப்பு, இறப்பு, சான்றிதழ்கள் அலுவலக வளாகத்தில் குப்பைகளில் கிடப்பது கண்டு பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
மேலும் சில சமூகவிரோதிகள் இந்த ஆவணங்களை எடுத்துதவறாக பயன்படுத்து வதாகவும் இதனை முறையாக பாதுகாக்க வேண்டும் இல்லை தீயிட்டு எரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டால் முறையான பதில் தெரிவிப்பதில்லை என்றும் பொதுமக்களின் ஆவணங்களை பாதுகாக்க முடியாத நிர்வாகம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுவருவதாக மிகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
CATEGORIES திருப்பூர்
TAGS உடுமலைப்பேட்டை நகராட்சிகுப்பைகளில் சான்றிதழ்கள்குற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பூர் மாவட்டம்முக்கிய செய்திகள்