BREAKING NEWS

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே 25 பவுன் நகை கொள்ளை.

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே 25 பவுன் நகை கொள்ளை.

திருப்பூர் மாவட்டம்,  உடுமலைப்பேட்டை அருகே உள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர் கந்தவேல் இவரது வீட்டில் அதிகாலை மர்மநபர்கள் சிலர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 25 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

 

சம்பவம் குறித்து உடுமலைப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு கதிர்வேல் குடும்பத்தோடு வெளியூர் சென்றிருந்தார்.

 

 

காலையில் வீட்டுக்கு வந்த கதிர்வேல் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு உள்ளிருத்த பொருட்கள் சிதறி கிடந்தது மேலும் பீரோவில் இருந்த 25 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தனர்.

 

 

இது குறித்து உடுமலை பேட்டை போலீசாருக்கு கந்தவேல் தகவல் தெரிவித்தார் இதன் அடிப்படையில் உடுமலைபேட்டை டிஎஸ்பி தேன்மொழிவேல் மற்றும் போலீசார் வந்து ஆய்வு செய்தனர்.

 

 

மேலும் மர்ம நபர்கள் பயன்படுத்திய அரிவாள், கட்டர் போன்ற பொருட்களில் இருந்த கைரேகைகளை தடையவியல் துறையினர் மூலம் ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )