BREAKING NEWS

திருப்பூர் மின் பகிர்மான வட்டத்திற்கு புதிய மேற்பார்வை பொறியாளர் பதவி.

திருப்பூர் மின் பகிர்மான வட்டத்திற்கு புதிய மேற்பார்வை பொறியாளர் பதவி.

திருப்பூரில் செயல்பட்டு வரும் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் கடந்த பல மாதங்களாக மேற்பார்வை பொறியாளர் பதவி காலியாக உள்ளதால் பல்வேறு வகையான பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் உடனடியாக மேற்பார்வை பொறியாளரை நியமிக்கப்படுவதை உறுதி செய்வது சம்பந்தமாக விரைவாக தீர்வுகாண வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச சார்பில் அதன் மாநில இணை பொதுச்செயலாளர் ஈ.பி.அ.சரவணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரிடையாக மனு அளித்தார்.

 

அதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் மதிப்புக்குரிய வினித் ஐ ஏ எஸ் அவர்கள் இது தொட‌ர்பாக விரைவாக தீர்வுகண்டு சம்பந்தப்பட்ட மின்சார வாரிய நிர்வாக உயர் அதிகாரிளுடன் பேசி சுமூக தீர்வு காணப்பட்டது.

 

அதன் படி தற்போது கடந்த பல மாதங்களாக காலியாக இருந்த திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பணியிடத்துக்கு தற்போது புதிதாக ஈரோடு தெற்கு கோட்ட செயற்பொறியாளராக இருந்து மேற்பார்வை பொறியாளராக பதவி உயர்வு பெற்றுள்ள S.முத்துவேல் அவர்களை புதிதாக திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளராக மின்சார வாரிய சேர்மேன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

 

 

திருப்பூரில் செயல்பட்டு வரும் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் கடந்த பல மாதங்களாக மேற்பார்வை பொறியாளர் பதவி காலியாக உள்ளதால் பல்வேறு வகையான பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் உடனடியாக மேற்பார்வை பொறியாளரை நியமிக்கப்படுவதை உறுதி செய்வது சம்பந்தமாக விரைவாக தீர்வுகாண வேண்டுமென,

 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச சார்பில் அதன் மாநில இணை பொதுச்செயலாளர் ஈ.பி.அ.சரவணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரிடையாக மனு அளித்தார் அதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் மதிப்புக்குரிய வினித் ஐ ஏ எஸ் அவர்கள் இது தொட‌ர்பாக விரைவாக தீர்வுகண்டு சம்பந்தப்பட்ட மின்சார வாரிய நிர்வாக உயர் அதிகாரிளுடன் பேசி சுமூக தீர்வு காணப்பட்டது.

 

அதன் படி தற்போது கடந்த பல மாதங்களாக காலியாக இருந்த திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பணியிடத்துக்கு தற்போது புதிதாக ஈரோடு தெற்கு கோட்ட செயற்பொறியாளராக இருந்து மேற்பார்வை பொறியாளராக பதவி உயர்வு பெற்றுள்ள திரு.S.முத்துவேல் அவர்களை புதிதாக திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளராக மின்சார வாரிய சேர்மேன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

 

அதன் படி திருப்பூர் மின் பகிர்மான வட்டத்திற்கு புதிய மேற்பார்வை பொறியாளராக S.முத்துவேல் அவர்கள் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

அப்போது திருப்பூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திற்கு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணை பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணன் தலைமையில் நிர்வாகிகள் நேரில் சென்று புதிதாக பொறுப்பேற்றள்ள மேற்பார்வை பொறியாளர் .S.முத்துவேல் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். 

 

இதில் மாவட்ட தொமுச பேரவை கவுன்சில் துணை தலைவர் ஆர்.ரெங்கசாமி, மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணை பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணன், நிர்வாகிகள் பெருமாநல்லூர் ஈ.பி.செந்தில் (எ) பழனிச்சாமி, ஆர்.கே. நகர். ஈ.பி.ஜோதிபாசு, ராஜ்மோகன், கண்ணன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

CATEGORIES
TAGS