BREAKING NEWS

திருமானூரில் தொடக்கக்கல்வி துறையில் விருது பெற்ற மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா.

திருமானூரில் தொடக்கக்கல்வி துறையில் விருது பெற்ற மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்டு பள்ளி கல்வி துறையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றும் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா வட்டார கல்வி அலுவளகத்தில் நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் பி.பரிமளம் தலைமை வகித்தார்
எஸ்.எஸ்.எ .மேற்பார்வையாளர் பெ.ஜெயபாரதி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர் என அனைவரையும் பாராட்டி நினைவு பரிசு வழங்கி சிறப்பு செய்து வாழ்த்தினர்.

 

CATEGORIES
TAGS