திருமானூர் அருகில் சோழப் பேரரசு செம்பியன் மாதேவி 1113 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்டிராதித்தம் சோழப்பேரரசி செம்பியன்மாதேவி 1113 வது பிறந்தநாள் தினம் 33 வது ஆண்டு கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் திருமானூர் சமூக ஆர்வலர்கள் கூட்மைப்பு சார்பாக கண்டிராதித்தம் கிராமத்தில் கண்டிராதித்தசோழனுடன் அமைந்துள்ள செம்பியன் மாதேவி திருஉருவ முழு சிலைக்கும். செம்பிக்குடி கிராமத்தில் அமைந்துள்ள திருஉருவ முழு வெங்கல சிலைக்கும் மாலைஅணிவித்து பிறசாதம் இனிப்பு படைத்து அபிஷேகம் செய்து வணங்கி பிறந்தநாளை கொண்டாடினர்.
சோழமன்னர்களான பராந்தகன், சுந்தரசோழன், கண்டிராதித்தன், அறிஞ்சயன், உத்தமசோழன,. இராசராசன் ஆகிய ஆறு மன்னர்களின் ஆட்சியில் பெறும்பங்குவகித்தவர் செம்பியன் மாதேவி, மேலும் 80ஆண்டுகள் வாழ்தவர் 60ஆண்டுகள் இறைப்பணியிலும் பொதுமக்கள் சேவையிலும் தன்னை அர்ப்பணித்து கொண்டார்.
பேரரசி செம்பியன்மாதேவி கோனேசிராசபுரம், திருக்கோடிகாவல், ஆனாங்கூர், செம்பியன்மாதேவி, ஆடுதுறை, கண்டிராதித்தம், குத்தலாம், திருவாரூர், விருதாச்சலம், திருவக்கரை போன்ற ஊர்களில் சிவன்கோவில் அமைத்தவர், கண்டிராதித்தம் ஊரில் 460 ஏக்கர் பரப்பளவில் பெறிய ஏரி அமைத்து பல்லாரம் ஏக்கர் நிலங்கள் முப்போகம் பயிரிட காரணமானவர், விழாவில் பாளை திருநாவுக்கரசு வரவேற்புரை நிகழ்த்தினார்.
திருமானூர் காவல் ஆய்வாளர் அனிதா ஆரோக்கியமேரி, மற்றும் அரியலூர் ஐஏஎஸ் அகாடமி நிறுவன டாக்டர் கதிர் கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கண்டிராதிக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சந்திர ராமமூர்த்தி விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார், டி ஆர் என் அறக்கட்டளை நிறுவனர் பாஸ்கர் செம்பியன் மாதேவி வரலாற்றை எடுத்துரைத்தார்.
சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் வரதராஜன், புருகாபி பார்த்திபன், ஜோதி இராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர் புகைப்படம் செம்பியன் மாதவி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினர்.