திருமானூர் ஒன்றித்தில் புதியபாரதம் எழுத்தரிவு திட்டத்தை சிறப்பாக நடத்திய அன்னிமங்கலம் கிராம ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளிக்கு கேடயம் வழங்கி பாராட்டுவிழா.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் பள்ளி சாரா மற்றும் வயது முதிர்ந்தோர் அவர்களுக்கான புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தின் மூலம் திருமானூர் ஒன்றியத்தில் முதல் கட்டமாக 56 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சித்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு நடைபெற்று வந்தது.
இந்த திட்டத்தின் மூலம் ஒன்றிய அளவில் சிறந்த பள்ளியாக அணிமங்கலம் கிராமம் ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி சிறப்பாக பணியாற்றியதை பாராட்டி பள்ளி ஆசிரியர் பிரபா அவர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெய பாரதி தலைமை வகித்து தலைமை ஆசிரியருக்கு பாராட்டுக்கடையும் வழங்கினார் மேலும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மேகலா பயிற்றுனர்.
மோகன் செந்தில் குமார் மாரிமுத்து உதவி ஆசிரியர் வெங்கடேசன் தன்னார்வலர்கள் பாலமுதா பள்ளி மேலாண்மை குழு தலைவி தமிழரசி மற்றும் ஊர் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி தலைமை ஆசிரியர் பிரபா ஏற்பாடு செய்திருந்தார்.