திருவள்ளூரில் ஜீவ விருட்சம் சேரிட்டெபிள் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற நல திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியி

ஜீவ விருட்சம் சேரிட்டெபிள் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற நல திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் தளபதி சுந்தர் கலந்துகொண்டு பார்வையற்றவர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கினார்
திருவள்ளூர் டிஎஸ்பி அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள இரட்சகர் இயேசு கரங்கள் திருச்சபையில், ஜீவ விருட்சம் சேரிட்டெபிள் டிரஸ்ட் சார்பில் போதகர் விஜயகுமார் தலைமையில் பார்வையற்றவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் தளபதி சுந்தர் கலந்து கொண்டு கண் பார்வை அற்ற 41 பயனாளிகளுக்கு அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மதிய உணவு வழங்கினார்.
பின்னர் திருச்சபை மக்களிடத்தில் பேசியவர் மணிப்பூர் கலவரத்தில் அநேக திருச்சபையில் இடிக்கப்பட்டும் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டும் கொடுமைகள் நடந்து வருவதாகவும் அதற்காக கிறிஸ்தவர்கள் தங்களது வலிமையான பிரார்த்தனைகள் மூலமாக அவர்கள் ஈடுபட்டு வந்தாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக தமிழகத்தில் பல்வேறு கட்டம் போராட்டங்களை கிறிஸ்துவலுக்காக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
மேலும் இது போன்ற திருச்சபைகளில் ஆதரவற்றவர்களுக்கும் கண் பார்வையற்றவர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நான் பங்கு பெறுவதில் பெருமிதம் அடைவதாக தளபதி சுந்தர் கூறினார். இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.