திருவாரூரில் நடைபெறும் இந்திய மாணவர் சங்க மாநாட்டில் கலந்துகொள்ள வந்தவர்களில் இரண்டு பேர் தஞ்சை கல்லணை கால்வாய் ஆற்றில் குளிக்கும்போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.

திருவாரூரில் நடைபெறும் இந்திய மாணவர் சங்க மாநாட்டில் கலந்துகொள்ள வந்தவர்களில் இரண்டு பேர் தஞ்சை கல்லணை கால்வாய் ஆற்றில் குளிக்கும்போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.
ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில். மற்றொருவரை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
சேலத்தில் இருந்து இந்திய மாணவர் சங்கம் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட 75 பேர் தனி பேருந்தில் திருவாருர் மாவட்டத்தில் நடைப்பெற்று வரும் இந்திய மாணவர் சங்கம் 26வது மாநில மாநாட்டிற்காக வந்தனர்.
தஞ்சை வந்த அவர்கள் பெரியக் கோவிலை ஒட்டி பாயும் கல்லணை கால்வாய் ஆற்றில் குளித்தனர் தினேஷ்குமார்(18), தாமரைச்செல்வன்(18) ஆகிய இருவரும் மற்றொரு படித்துறையில் குளித்து கொண்டு இருந்தபோது, தண்ணீரின் வேகம் காரணமாக இருவரும் ஆற்றில் இழுத்து செல்லப்பட்டனர். இவர்களில் தினேஷ்குமார் கரையில் வளர்ந்து இருந்த மரக்கிளையை பிடித்தபடி காப்பாற்றுமாறு கூச்சலிட்டார். தகவல் அறிந்து வந்த தீபனைப்பு துறையினர் மரக்கிளையை பிடித்தபடி இருந்த தினேஷ்குமாரை பத்திரமாக மீட்டனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தாமரைச்செல்வனை தீயனைப்பு துறையினர் தேடி வருகின்றனர். மாநாட்டில கலந்து கொள்ள வந்த இடத்தில் ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.