திருவாரூர் மாவட்டத்தில் 6 கோடி மதிப்புள்ள ஐந்தரை கிலோ எடை கொண்ட திமிங்கலம் எச்சம் பறிமுதல்.. திருவாரூர் மாவட்ட வனத்துறை அதிரடி.
திருவாரூரில் திமிங்கிலம் எச்சம் கடத்தப்படுவதாக திருச்சி தலைமை வன பாதுகாவலர் சதீஷ் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட வனத்துறை அலுவலர் அறிவொளி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அம்மையப்பன் பகுதியில்… நான்கு நபர்கள் மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்துள்ளார்கள். வந்தவர்கள் வனத்துறை அதிகாரிகளை கண்டதும் இருசக்கர வாகனங்களை விட்டு தப்பி ஓட முயன்றனர்.
திருவாரூர் மாவட்ட வனத்துறை அலுவலர் அறிவொளி மற்றும் அவரது குழுவினர் தப்பி ஓட முயன்றவர்களை பிடித்தனர். அப்பொழுது சுரேஷ், வேல்முருகன், பாலசுப்பிரமணியன் ஆகிய மூவரும் பிடிபட்டனர். நால்வரில் பிரதீப் ராஜ்குமார் என்பவன் தப்பி விட்டான்.
அப்பொழுது பிடிபட்ட இருசக்கர வாகனங்களை ஆய்வு செய்த பொழுது அதில் அவர்கள் கடத்தி வந்த ஐந்தரை கிலோ எடையுள்ள 6 கோடி மதிப்புள்ள திமிங்கில எச்சம் இருந்தது கண்டறியப்பட்டது.
பிடிபட்ட சுரேஷ் வேல்முருகன் பாலசுப்பிரமணியன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை அழைத்து வந்து திருவாரூர் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணையை மாவட்ட வனத்துறை அலுவலர் அறிவொளி தீவிரமாக நடத்தியுள்ளார்.
அதன் அடிப்படையில் தப்பி ஓடிய பிரதீப் ராஜ்குமார் என்பவன் முக்கிய குற்றவாளி எனவும், இந்த திமிங்கிலம் எச்சம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது… யாரிடம் விற்க அவர்கள் முயற்சித்தார்கள்… என்பது குறித்த விவரங்கள் பிரதீப் ராஜ்குமாரை கைது செய்து விசாரித்தால் தெரியவரும் எனவும் தெரிவித்தார்.
பிரதீப் ராஜ்குமாரை திருவாரூர் மாவட்ட வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள். மேலும் கைது செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்ட மூன்று நபரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 6 கோடி மதிப்பிலான திமிங்கலம் எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் ஜி. ரவிச்சந்திரன் திருவாரூர் மாவட்டம்.