திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராமத்தில் 22 ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு முகூர்த்த கால் நடும் விழா நடைப்பெற்றது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பாரில் வரும் 22ம் தேதி நடைப்பெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட சுற்றுவட்ட மாவட்டங்களை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளும், மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்வார்கள்.
அப்படி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் கூத்தைப்பார் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியின் சார்பில் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும்.
அதற்காக இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான பூர்வாங்க பணியை தொடங்கும் விதமாக இன்று காலை 6 மணி அளவில் கணபதி ஹோமத்துடன் முகூர்த்தகால் நடும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES திருச்சி
TAGS ஜல்லிக்கட்டு போட்டி முகூர்த்தகால் நடும் விழாதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருச்சி திருவெறும்பூர்திருச்சி மாவட்டம்முக்கிய செய்திகள்