திருவையாறு அருகே இளம் பெண் கொலை வழக்கில் காதலன் உள்பட 3 பேர் கைது.
திருவையாறு அருகே இளம் பெண் கொலை வழக்கில் காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
திருவையாறு அடுத்த மனக்கரம்பை வி ஆர் எஸ் நகர் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் அபிராமி ( 23 ), வீட்டில் கத்தியால் குத்தப்பட்டு சடலமாக கிடந்தார்.
கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் நடுக்காவேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திருவையாறு அடுத்த மனத்திடல் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்கிற வீர ராஜேந்திரன் என்பவரது மகன் முகேஷ் (23) என்பவர் கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கரிடம் சரண் அடைந்தார்.
இதனை அடுத்து முகேஷ் நடுக்காவேரி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் முகேஷிடம் நடத்திய விசாரணையில், சென்னையில் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருவதாகவும், நானும் அபிராமியும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்தோம் நாங்கள் இருவரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அபிராமி நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.
ஒரு வாரத்திற்கு முன்பு அபிராமி சென்னை வந்திருந்தார் 19 தேதி சென்னையிலிருந்து மனக்கரம்பைக்கு வந்தார் நானும் சென்னையில் இருந்து மனக்கரம்பை வந்தேன் அபிராமி தாய் செல்வி வேலைக்கு சென்று விட்டார் அபிராமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
நான் அபிராமியிடம் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினேன் அபிராமி திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டார்.
இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் ஆத்திரமடைந்த நான் கத்தியால் குத்தி அபிராமியை கொலை செய்தேன்.என்று கூறினார் மேலும் என் தந்தையிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தேன் என் தந்தையும் வளப்பக்குடியை சேர்ந்த மொட்டையாண்டி மகன் மகேந்திரன் வயது 37 ஆகிய இருவரும் மனக்கரம்பை வந்தனர்.
நான் அணிந்திருந்த ரத்த கரை உள்ள ஆடைகளை கழற்றி தந்தையிடம் கொடுத்தேன் அவரும் மகேந்திரனும் சட்டையை கொள்ளிடம் ஆற்றில் வீசி விட்டு, மூவரும் சென்று விட்டோம் என்றார். முகேஷின் வாக்குமூலம் அடிப்படையில் நடுக்காவேரி போலீசார் வழக்கு பதிவு செய்து முகேஷ். அவரது தந்தை ராமலிங்கம், வயலில் வேலை பார்த்து வரும் மகேந்திரன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து திருவையாறு நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தினர் நீதிபதி மூன்று பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்