திரையரங்குகளில் கட்டப்பட்ட பேனர் கட் அவுட்டுகளை அகற்ற காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி அதிரடி உத்தரவு.
பொங்கல் திருநாளையொட்டி பிரபல திரைப்படங்கள் நடித்த திரைப்படங்கள் இன்று காஞ்சியில் திரையிடப்பட்டது. அவ்வகையில் அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு திரைப்படங்கள் இன்று காலை சிறப்பு காட்சிகளுடன் திரையிடப்பட்டது.
இதனை ஒட்டி திரையரங்கம் நுழைவாயில் இருந்து அவ்வளாக முழுவதும் பிளக்ஸ் பேனர் மற்றும் கட் அவுட்டுகள் என அதிக அளவில் காணப்பட்டது.
ஏற்கனவே தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் அளித்த நிலையிலும் அதனை பின்பற்றாமல் இருப்பதாக தொடர்புகள் எழுந்து வந்தது.
இந்நிலையில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி பாபு திரையரங்கில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பாதுகாப்பு அற்ற முறையில் கட்டப்பட்டு வந்த பேனர்கள் உடனடியாக 4 மணிக்குள் எடுக்க திரையரங்கு நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு திரையரங்க நிர்வாகிகள் தனது ஊழியர்கள் உதவியுடன் பேனர்களை அகற்றி வருகின்றனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக அசம்பாவிதங்கள் நிகழா வண்ணம் இருக்க திரையரங்க வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.