தீயில் கருகிய கூரை வீடு.! திமுகவினர் நேரில் சென்று ஆறுதல்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த N.நாரையூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் அஞ்சலை வீடு தீ பிடித்து எறிந்தது. திமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு சி.வெ.கணேசன் ஆலோசனைப்படி கூரை வீடு தீ விபத்து குறித்து தகவல் அறிந்த திமுக நல்லூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தங்க நாராயணசாமி நேரில் சென்று அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் மற்றும் குடம், சேலை, வேஷ்டி, துண்டு ஆகியவை வழங்கி குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
உடன் மாவட்ட கவுன்சிலர் நகர்.சி.சக்திவினாயகம், மு.கவுன்சிலர் சோலைராஜன் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற மாவட்ட துனை தலைவர் செல்வமணி, நாரையூர் கிளை செயலாளர் ராஜி, விசிக நாரையூர் பெரியசாமி இப்பட பலர் கலந்து மேலும் உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் கண்டிப்பாக செய்கிறேன் என உறுதியளித்தார்.