BREAKING NEWS

துணை குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு மாயாவதி ஆதரவு..

துணை குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு மாயாவதி ஆதரவு..

சமீபத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு அவர்கள் புதிய குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்

இந்நிலையில் துணை குடியரசு தலைவர் தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பாஜக வேட்பாளராக ஜெகதீப் தங்கார் மற்றும் காங்கிரஸ் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா ஆகியோர் போட்டியிடுகின்றனர். எனவே இரு தரப்பு வேட்பாளர்களும் தங்களுக்கு ஆதரவு தேடி தீவிர சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் பாஜக எதிர்ப்பு கொள்கையை கடைபிடித்து வரும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை திடீரென பாஜக துணை குடியரசு தலைவர் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . ஏற்கனவே ஒரு சில எதிர்க்கட்சிகள் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தற்போது மாயாவதியும் ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )