துவாக்குடியில் எல்கை பந்தயம்- சீறிபாய்ந்த மாடுகள் மற்றும் குதிரைகள்.
திருச்சி துவாக்குடி ரிங் ரோட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் முன்னிட்டு திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பில் எல்கைபந்தயம் போட்டி நடைபெற்றது.
இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் பெரிய மாடு, சிறிய மாடு, பெரிய குதிரை, சிறிய குதிரை என நான்கு வகைகளில் போட்டி நடைபெற்றது. நிர்ணயிக்கப்பட்ட 10 மைல் தூர இலக்கை நோக்கி அதிவேகத்தில் மாட்டுவண்டிகளும் குதிரைவண்டிகளும் சீறி பாய்ந்தது.
அனைத்து வகைகளிலும் முதல் நான்கு இடங்களை பிடித்த மாடுகள் குதிரைகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரிசுகளை வழங்கினார்.
இந்த போட்டியில் திருச்சி தஞ்சாவூர் புதுக்கோட்டை மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டுவண்டிகள், மற்றும் குதிரை வண்டிகள் கலந்து கொண்டது.
CATEGORIES திருச்சி
TAGS அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிகுதிரை வண்டி எல்கைபந்தயம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருச்சி துவாக்குடி ரிங் ரோட்டில்திருச்சி மாவட்டம்மாடுஎல்கைபந்தயம் போட்டிமுக்கிய செய்திகள்